Saturday, December 7, 2013

திருவாசகம் - மாணிக்கவாசகர் - இளையராஜா

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் 
இளையராஜா திருவாசகத்துக்கு இசை வடிவம் கொடுத்த பின் இப்படியும் சொல்லலாம்
இளையராஜாவின் திருவாசக இசைக்கு உருகாதார் ஒருஇசைக்கும் உருகார்.

எனக்கு திருவாசகத்தின் பொருள் தெரியாது. ஆனால்  இளையராஜா இப்படி ஒரு இசையை தந்த பின் மாணிக்கவாசகரின் படைப்பின் உயரம் தெரிகிறது.

ஒரு கற்பனை பாத்திரத்துக்கே (சிவபெருமான்) இப்படி என்றால், ஒரு வேளை அது உண்மையாக இருந்திருந்தால்..........

            மாணிக்கவாசகருக்கு பாட்டுக்கடவுளாகவும்,
                    இளையராஜாவுக்கு இசைக்கடவுளாகவும்
                                பதவி உயர்வு கிடைத்திருக்கும்.

Wednesday, February 27, 2013

திருமண வேளை : முதலாம் ஆண்டு

குமுதம் கேள்வி பதில் பகுதியில் வைரமுத்துவிடம் ஒர் எளிய கேள்வி.
வாழ்க்கை என்பது என்ன?
கொஞ்சம் சிக்கலான கேள்வி தான்,ஆனால் அவரும் சளைக்காமல் எளியதாகவே பதிலலித்தார்.
திருமணத்திற்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.
யாராலும் மறுக்க முடியாத பதில்.

கடந்த ஆண்டு என் திருமணத்திற்கு வருகை தந்தும் தொலைதொடர்பு கொண்டும் வாழ்த்திய அனைவரையும் நினைக்கும் போது, என் முதல் பாதி போராட்டம் வெற்றி பெற்றதாகவே தெரிகின்றது.

வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூறி அசிங்கப்படுத்தாமல் என் மகிழ்ச்சியில் பங்களிக்கிறேன்.













Wednesday, November 21, 2012

காணவில்லை 1 : ஜிலேபி

உலகமயமாக்கலின் விளைவாக, அயல் நாடுகளில் கிடைக்கும் இனிப்பு மற்றும் மதுபானங்களும் உள்ளுரில் எளிதாக கிடைக்கிறது.





ஆனால் நம்மூர் வெள்ளை ஜிலேபியை காணவில்லை. அதற்கு பதிலாக சிவப்பு கலர் ஜாங்கிரி (மொரு மொருன்னு) விக்குது...  எங்காவது, யாராவது பார்த்தா கொஞ்சம் சொல்லுங்க..



Sunday, October 14, 2012

கையாலாகாத கடவுள்

1 பழனி.
திருமணமானதும் மனைவி மற்றும் அப்பா அம்மாவுடன் பழனி செல்ல நேர்ந்தது. மலை ஏற Rope Carல் பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் காத்திருந்தோம். வரிசை நகரவே இல்லை. முன்னால் இருந்தவரை விசாரித்தால் அவர் வந்து பல மணி நேரம் ஆச்சு. ஏதோ ஒரு முக்கியமானவர் வந்திருப்பதால் யாருக்கும் Rope Car வசதி கிடைக்காதாம். அப்புறம் என்ன நட-ராசா தான்
பக்கத்தில் இருந்த அறிவிப்பு பலகை....
மலை ஏறியதும் மற்றொரு அறிவிப்பு பலகை...
2. திருச்செந்தூர்
2012 மே மாதம் திருச்செந்தூர் கோவிலுக்கு நானும் மணி அண்ணனும் குடும்பதுடன் (2+2) சென்றோம். அங்கே வெள்ள வேட்டி கட்டி பூனூல் போட்டுக்கிட்டு 8-9  பேர் தனித்தனியே. சார் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னனு விசாரிச்சா, special தரிசனமாம். ஒருத்தருக்கு 250 ருபாயாம்.

special தரிசனம் - அதிக பணம், இது எல்லா இடத்திலும் சாதாரணம். அதுக்கு ஏன் எல்லா பூசாரியும் மீன் சந்தைல மீன் விற்கிறவன் மாதிரி இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூவுறாங்க??? பக்கத்தில் அறிவிப்பு பலகை special தரிசனமாம் - 100 ருபாய்ன்னு சொல்லுது. ஒரு வேளை அது பழைய அறிவிப்பாக இருக்கும்ன்னு நினச்சேன். ஆனா 4*250 = 1000 தந்ததும் 4*100=400க்கு ரசீது தந்தான் (இனி மரியாதை மயிரளவும் இல்லை). 4*150=600 ருபாய் சில நிமிடங்களில் அள்ளினான். இது போதாதுன்னு தரிசனம் முடிஞ்சதும் பூசாரிக்கு bata 500 ரூபாயாம். ஆக எங்களிடம் மட்டும் 1100 ருபாய்.

இவனுக பூசாரியா இல்ல பூச்சாண்டியா? இவனுகள விட சென்னை traffic police எவ்வளவோ மேல்.

தன்னை வைத்து காசு சம்பாரிக்கும் இந்த கூட்டத்தை திருவாளர் கோமணாண்டி* ஒன்றும் செய்வதில்லை. மாறாக தனக்கு அடுத்த இடத்தை அவர்களுக்கு கொடுத்து, மக்கள் அவர்களை கடவுளாக மதிக்கும் படி வைத்திருக்கிறார். த(க)ன் முன் நடக்கும் கூத்தை தனக்கு தரும் லஞ்சத்தால் (அபிசேகம்) மன்னிக்கிறார்.

ஆனால், அறியா வயதில் தவறு செய்யும் சிறுவர்கள் & சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் கண்களை குத்த இந்த வீரியம் குறைந்த & கையாலாகாத கடவுள் தவருவதே இல்லை.


* - கோமணாண்டி மட்டுமே இப்படி என்றில்லை. எல்லா ..... களும் தான்

Wednesday, October 10, 2012

Monday, February 13, 2012

திருமண வேளை 4: கடலை மிட்டாய்

திருமண விருந்திற்கு சமையல் கலைஞர்களை தேர்வு செயத பின், உணவு பண்டங்களை பற்றி அப்பா அம்மாவுடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது,

'பாத்தியா கடலை மிட்டாயை விட்டுட்டோம்' ..... இது என் அப்பா.

'அட ஆமா கடலை மிட்டாயை மறந்திட்டோம். கண்டிப்பா சேர்க்கனும்'..... இது என் அம்மா.

'???!!!!ுதம்புத்முஇதமிஅஉ*&%%&**&ஈடனூபரிஒரதமி!!!-+=!!' .... இது நான்.
ஒன்னும் புரியல.

வீட்ல நடக்குற கடைசி திருமணத்தின் விருந்தில் கடலை மிட்டாய் வைக்கனுமாம்.
அதன் பொருள், 'எங்க வீட்ல நடக்குற கடைசி திருமணம்.'

எனக்கென்னமோ இதல ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தோனுது. கண்டுபிடிச்சவுங்க சொல்லுங்க.

Saturday, February 11, 2012

திருமண வேளை 3: பழகிய முகங்கள்

பள்ளி முடிந்து, கல்லூரி வந்த போது பலரது தொடர்பை விட்டுவிட்டேன். இப்போது திருமணத்திற்கு அழைப்பதற்காக பழைய - பழகிய முகங்களை மீண்டும் தேடுகிறேன்.

அவ்வாறாக இன்று, பத்தாம் வகுப்பு உயிரியல் ஆசிரியர் ராபர்ட் அவர்களை 12 ஆண்டுகள் கழித்து இன்று தொலைபேசியில் அழைத்தேன். 2000ஆம் ஆண்டு தேர்வு எழுதிய பின் அவரை பார்க்கவோ பேசவோ இல்லை.

அவரது ஞாபகத்தில் நான் இருப்பேனா என்ற சந்தேகத்துடன். "சார் நான் உங்களது பழைய மாணவன். என் பெயர் மோகன்குமார். என்னை ஞாபகம் இருக்கா"?
சிறிதும் யோசிக்காமல் பதில் வந்தது "மோகன்குமார் ..... கண்ணாடி போட்டிருப்ப..... வேடசந்தூர் தான....."

ஒரு மாணவணுக்கு வாழ்க்கையில் மொத்தமாக 60 அல்லது 70 ஆசிரியர்கள் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஆண்டுக்கு 60 - 70 மாணவர்கள்.

எனது ஞாபகத்தில் கடல். கடலின் ஞாபகத்தில் நான். இந்த வேறுபாட்டின் அளவே எனது மகிழ்ச்சியின் அளவு.

அடுத்தது இயற்பியல் ஆசிரியர் அழகப்பன் மற்றும் தமிழ் ஆசிரியர் கிளாட்சன்.