கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி போடிநாயக்கனூரில் ஒரு திருமணத்துக்குச் சென்றேன். முந்தய நாள் இரவு மற்றும் திருமணத்தன்று காலை, இரண்டு வேளைகளும் உணவு (அனைத்து பண்டங்களும்) அருமையாக இருந்த்து.
மதியம் ஆரம்பித்தது அந்த ருசீகரமான தருணம்.
காளான் பிரியாணி + தயிர் வெங்காயத்தில் ஆரம்பித்தது பந்தி. கைக்கெட்டும் தூரத்தில் தயிர் வெங்காயமிருந்தும், அதை தெட விடாமல் செய்தது பிரியாணி. பிரியாணியில் காளானா அல்லது காளானில பிரியாணியா என்று தெரியவில்லை.
அடுத்து சோறு + பருப்பு + நெய். இந்த கூட்டணியில் தன் திறமையை காட்ட சமயல் கலைஞருக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை. எனவே அடுத்து வந்த சாம்பாரைப் பற்றி....
சாம்பாருடன் சோறு கலந்து ஒரு வாய் சாப்பிட்டதும், வேறு எதுவும் மனதில் ஓடவில்லை. ஒரு தியான நிலையில் சாம்பாரை முடித்தேன். சாம்பாரின் ருசியில் லயித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கும் சாம்பார் ஊற்றி சாப்பிடலாமா என்று நினைத்தேன். ஒரு வேளை அடுத்த பதார்த்தமும் நன்றாக இருந்தால்? கிட்டத்தட்ட Road Not Taken Robert Frost மனநிலை தான். வெகு நேரம் எடுக்காமல் சட்டென்று தட்கல் முடிவெடுத்து, பயணத்தை தொடர்ந்த போது, காரக்குழம்பு....
காரக்குழம்பு நாவில் பட்டதும், மூளையில் தோன்றியது, எவ்வளவு பெரிய தவறு செய்ய நினைத்தேன். குழம்பை தண்ணீர் போல குடிக்க நினைத்தேன். வாழை இலை பாதையில் உணவு பயணம் இணிதாகவே இருந்தது .
நான் எடுத்த முடிவு சரியே என்று பின்னர் வந்த ரசம் முன்மொழிந்தது. அடுத்து வந்த மோர் அதை வழிமொழிந்தது.
மலைப் பாம்பாக சிறிது நேரம் அசைய முடியாமல் அமர்ந்தே இருந்தேன்.
எல்லாம் முடிந்த பின், குற்றவாளியின் கண்ணீராக தயிர் வெங்காயத்தை இலையில் விட்டுச்சென்றேன்.
முன்னாள் முதல்வர் கருனாநிதியின் நடையில் செல்வதென்றால், அன்று சமயல் செயத கலைஞர்களை, எந்த நிகழ்ச்சிக்கும் கண்ணை மூடிக்கிட்டு பதிவு செய்யலாம்.
பதிவு செஞ்சுட்டேன்.
'குற்றவாளியின் கண்ணீராக' - உபயம் வைரமுத்து