Sunday, October 14, 2012

கையாலாகாத கடவுள்

1 பழனி.
திருமணமானதும் மனைவி மற்றும் அப்பா அம்மாவுடன் பழனி செல்ல நேர்ந்தது. மலை ஏற Rope Carல் பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் காத்திருந்தோம். வரிசை நகரவே இல்லை. முன்னால் இருந்தவரை விசாரித்தால் அவர் வந்து பல மணி நேரம் ஆச்சு. ஏதோ ஒரு முக்கியமானவர் வந்திருப்பதால் யாருக்கும் Rope Car வசதி கிடைக்காதாம். அப்புறம் என்ன நட-ராசா தான்
பக்கத்தில் இருந்த அறிவிப்பு பலகை....
மலை ஏறியதும் மற்றொரு அறிவிப்பு பலகை...
2. திருச்செந்தூர்
2012 மே மாதம் திருச்செந்தூர் கோவிலுக்கு நானும் மணி அண்ணனும் குடும்பதுடன் (2+2) சென்றோம். அங்கே வெள்ள வேட்டி கட்டி பூனூல் போட்டுக்கிட்டு 8-9  பேர் தனித்தனியே. சார் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னனு விசாரிச்சா, special தரிசனமாம். ஒருத்தருக்கு 250 ருபாயாம்.

special தரிசனம் - அதிக பணம், இது எல்லா இடத்திலும் சாதாரணம். அதுக்கு ஏன் எல்லா பூசாரியும் மீன் சந்தைல மீன் விற்கிறவன் மாதிரி இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூவுறாங்க??? பக்கத்தில் அறிவிப்பு பலகை special தரிசனமாம் - 100 ருபாய்ன்னு சொல்லுது. ஒரு வேளை அது பழைய அறிவிப்பாக இருக்கும்ன்னு நினச்சேன். ஆனா 4*250 = 1000 தந்ததும் 4*100=400க்கு ரசீது தந்தான் (இனி மரியாதை மயிரளவும் இல்லை). 4*150=600 ருபாய் சில நிமிடங்களில் அள்ளினான். இது போதாதுன்னு தரிசனம் முடிஞ்சதும் பூசாரிக்கு bata 500 ரூபாயாம். ஆக எங்களிடம் மட்டும் 1100 ருபாய்.

இவனுக பூசாரியா இல்ல பூச்சாண்டியா? இவனுகள விட சென்னை traffic police எவ்வளவோ மேல்.

தன்னை வைத்து காசு சம்பாரிக்கும் இந்த கூட்டத்தை திருவாளர் கோமணாண்டி* ஒன்றும் செய்வதில்லை. மாறாக தனக்கு அடுத்த இடத்தை அவர்களுக்கு கொடுத்து, மக்கள் அவர்களை கடவுளாக மதிக்கும் படி வைத்திருக்கிறார். த(க)ன் முன் நடக்கும் கூத்தை தனக்கு தரும் லஞ்சத்தால் (அபிசேகம்) மன்னிக்கிறார்.

ஆனால், அறியா வயதில் தவறு செய்யும் சிறுவர்கள் & சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் கண்களை குத்த இந்த வீரியம் குறைந்த & கையாலாகாத கடவுள் தவருவதே இல்லை.


* - கோமணாண்டி மட்டுமே இப்படி என்றில்லை. எல்லா ..... களும் தான்

4 comments:

  1. அட இதே கடுப்பு தான் எனக்கும்
    போன சனி கிழமை திருவேற்காடு , மாங்காடு மாரியம்மன் கோயிலுக்கு போக வேண்டிய நிர்பந்தம்..
    வழக்கமா அய்யருங்க promote செய்யுற பெருமாள் அனுமார் அண்ட் allied godsoda கோயில்களில் மட்டுமே பார்த்த காசு புடுங்கல்
    இப்போ மாரியம்மன் கோயில்லையும் பரவியாச்சு ...
    காசு குடுக்காம சாமிய பாக்க 'தர்ம' தரிசனம் queue ல ponaa கொறஞ்சது 2 மணி நேரமாவது ஆகும் ..
    அதுக்கு அடுத்தது 20Rs டிக்கெட்... அப்புறம் 50 Rs ticket.....
    குடும்பத்தோட மாரியம்மனை Weekend தரிசிக்க வரும் 'உழைச்சு வோஞ்சு போன' மிடில் அண்ட் லோவேர் மிடில் கிளாஸ் சுக்கும் Budget Rs.300 to 500 per temple visit.....
    Chai!

    ReplyDelete
  2. ரொம்ப லேட்டான அனுபவம் தம்பி... இந்த தரிசணம் எனக்கு திருப்பதியில் மிகச் சிறிய வயதில் ஏற்பட்டாகிவிட்டது.... அதனால் கோவில் பக்கம் செல்வதே இல்லை.....
    ~பாலா (தமிழ் மாநில விஜய. டீ. ஆர் நற்பணி மன்றம்)

    ReplyDelete
    Replies
    1. சாமி கும்பிடாட்டியும் கோயிலுக்குள்ள போகனும்னு திருமணத்திற்கு முன்னாடியே ஒப்பந்தம் போட்டாச்சு.

      Delete
  3. கண் குத்தும் கடவுள்களின் list http://www.youtube.com/watch?v=cWOfKHs02tg&feature=share

    ReplyDelete